நீட் தேர்வுக்கு எதிராக திமுக., கையெழுத்து: ஐகோர்ட்டில் முறையீடு
நீட் தேர்வுக்கு எதிராக திமுக., கையெழுத்து: ஐகோர்ட்டில் முறையீடு
UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 04:41 PM
அ நிறம் | அளவு
சென்னை:
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க., சார்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக கூறி, தாமாக முன்வந்து, பொது நல வழக்காக விசாரிக்க வேண்டும் என தேசிய மக்கள் கட்சி தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி முறையிட்டார். இதனை, தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லஷ்மி நாராயன் அமர்வு, தலைமை நீதிபதி அமர்வில் அடுத்த வாரம் முறையிடும்படி அறிவுறுத்தினர்.
