தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாகிஸ்தானில் கல்வியாளர்கள் கொந்தளிப்பு

பாகிஸ்தானில் கல்வியாளர்கள் கொந்தளிப்பு

பாகிஸ்தானில் கல்வியாளர்கள் கொந்தளிப்பு


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 27, 2023 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 27, 2023 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இஸ்லாமாபாத்:
டார்வினின் பரிணாமக் கோட்பாடு உட்பட இஸ்லாமிய ஷரியாத்துக்கு முரணான அனைத்து அறிவியல் மற்றும் பகுத்தறிவு கருத்துக்களும் பொய்யானவை என பாகிஸ்தானில் இஸ்லாமிய மதகுருக்கள் கல்லுாரி பேராசிரியரை வற்புறுத்தி சொல்ல வைக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.இஸ்லாமிய பாரம்பரிய முறைப்படி உடை அணியாத பெண்களுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம் நடந்துவருகிறது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு நகரில் உள்ள அரசு கல்லுாரியில் உயிரியல் துறைஉதவி பேராசிரியராக பணியாற்றி வரும் ஷேர் அலி என்பவர் இந்த போராட்டத்துக்குஎதிராக பேசி வந்தார்.இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட உரிமை குறித்து இவர் உரை நிகழ்த்தினார். இது வெளியானது. பேராசிரியர் ஷேர் அலியில் பேச்சுக்கள் மட்டுமின்றி கல்லுாரியில் அவர் நடத்தும் பாடங்கள் உட்பட அனைத்தும் இஸ்லாத்துக்கு எதிராக இருப்பதாக மதகுருக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதற்கு பதில் அளித்த பேராசிரியர் அலி தான் நடத்தும் டார்வினின் பரிணாம வளர்ச்சி உட்பட அனைத்து பாடங்களும் கல்வி வாரியம் வகுத்த பாட திட்டத்தின்படி உள்ளதாகவும் அதில் மாற்று கருத்து இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்தார். இதனால் ஆத்திரம்அடைந்த மதகுருக்கள் மூன்று பக்க அறிக்கையை தயார் செய்து அதை பேராசிரியர் ஷேர் அலியிடம் கொடுத்து வற்புறுத்தி படிக்க வைத்தனர். அதில் டார்வினின் பரிணாமக் கோட்பாடு உட்பட இஸ்லாமிய ஷரியாத்துக்கு முரணான அனைத்து அறிவியல் மற்றும்பகுத்தறிவு கருத்துக்களும் பொய்யானவை.ஷரியா விதித்துள்ள கோட்பாடு அடிப்படையில் ஆண்களுடன் பெண்கள் தேவையில்லாமல் கலப்பது அனுமதிக்கப்படாது என குறிப்பிடப்பட்டு இருந்தது. பேராசிரியர் அலியை வற்புறுத்தி அறிக்கையை படிக்க வைத்த மதகுருக்கள் அதை வெளியிட்டனர். இது பாகிஸ்தானில் உள்ள கல்வியாளர்கள் மத்தியில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us