தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரிட்டன் பல்கலையுடன் அப்பல்லோ குழுமம் ஒப்பந்தம்

பிரிட்டன் பல்கலையுடன் அப்பல்லோ குழுமம் ஒப்பந்தம்

பிரிட்டன் பல்கலையுடன் அப்பல்லோ குழுமம் ஒப்பந்தம்


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 27, 2023 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 27, 2023 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மருத்துவச் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஒருங்கிணைத்து செயல்படுவதற்காக, பிரிட்டனின் லெய்செஸ்டர் பல்கலையுடன், அப்பல்லோ மருத்துவ குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது.இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவர்பிரீத்தா ரெட்டி கூறியதாவது:
சுகாதாரத்துறை பணியாளர்களை உலகளாவிய தரத்தில் உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன், அப்பல்லோ மருத்துவ கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதற்காக, சர்வதேச தரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.அதன் தொடர்ச்சியாக, பிரிட்டனின் லெய்செஸ்டர் பல்கலையுடன் கைகோர்த்துள்ளோம். இதன் வாயிலாக, மருத்துவம் சார் கல்வி, திறன் மேம்பாடு, மருத்துவ சேவைகள், ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட முடியும்.அத்துடன், இந்தியா மற்றும் பிரிட்டனுடனான திறன்மிக்க சுகாதார பணியாளர்கள் தேவையையும் பூர்த்தி செய்ய இயலும். மருத்துவ சேவைகளில் நிலவிவரும் உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.லெய்செஸ்டர் பல்கலை துணைவேந்தர் நிஷான் கனகராஜா, அப்பல்லோ கல்வி நிறுவன துணைவேந்தர் டாக்டர் வினோத் பட், புற்றுநோயியல் மருத்துவ சேவைகள் இயக்குனர் ஹர்ஷத் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us