அரசு பஸ்சில் இருந்து எல்.கே.ஜி., மாணவியை இறக்கிவிட்ட நடத்துனர்
அரசு பஸ்சில் இருந்து எல்.கே.ஜி., மாணவியை இறக்கிவிட்ட நடத்துனர்
UPDATED : நவ 08, 2023 12:00 AM
ADDED : நவ 08, 2023 08:27 PM
கலபுரகி:
பஸ் பாஸ், ஆதார் அட்டை இல்லை என்பதற்காக எல்.கே.ஜி., மாணவியை அரசு பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட மனிதாபிமானமற்ற சம்பவம், கலபுரகியில் நடந்துள்ளது.கலபுரகி மாவட்டம், சித்தாபூர் தண்டோடி கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜா. இவரது மகள் சான்வி. மஹாதேவம்மா பாட்டீல் நினைவுப் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு அரசு பஸ்சில் சென்று வருகிறார்.வழக்கம்போல் நேற்று முன்தினமும் காலையில் பஸ்சில் பயணம் செய்தார். மாலையில் பள்ளி முடிந்து, பஸ் நிலையத்தில் இருந்த அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் இருந்து நடத்துனர் சந்துசாமி, மாணவியிடம் பாஸ், ஆதார் அட்டை கேட்டுள்ளார்.அதற்கு மாணவி, தன்னிடம் அவை இல்லை என்று கூறியபோது, டிக்கெட் எடுத்து பயணம் செய்யும்படி நடத்துனர் கூறியுள்ளார். அதற்கு மாணவி, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் சின்னஞ்சிறுமியை பஸ்சில் இருந்து நடத்துனர் இறக்கிவிட்டுள்ளார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த, சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்ற மாணவர், சிறுமியுடன் கீழே இறங்கி, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.அங்கு வந்த சிறுமியின் தந்தை பசவராஜா, ஒன்றாம் வகுப்பில் இருந்து தான் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. எனவே தான் பஸ் பாஸ் எடுக்கவில்லை. இதுவரை தன் பள்ளி அடையாள அட்டையை காண்பித்து தான் என் மகள் பயணித்து வந்தார்.இன்று நடத்துனர் நடந்து கொண்ட விதம், வேதனை அளிக்கிறது. வருங்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையை, எந்த மாணவ - மாணவியரும் பாதிக்காத வகையில், நடத்துனர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.எல்.கே.ஜி., படிக்கும் மாணவியை, பஸ்சில் இருந்து கீழே நடத்துனரின் மனிதாபிதமானமற்ற செயலை பஸ்சில் இருந்தவர்கள் கண்டித்தனர்.
