தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியலை புரிந்தால் அறிவாளி மாணவியருக்கு ஊக்கம் அளித்த நிகழ்ச்சி

அறிவியலை புரிந்தால் அறிவாளி மாணவியருக்கு ஊக்கம் அளித்த நிகழ்ச்சி

அறிவியலை புரிந்தால் அறிவாளி மாணவியருக்கு ஊக்கம் அளித்த நிகழ்ச்சி


UPDATED : நவ 09, 2023 12:00 AM

ADDED : நவ 09, 2023 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2023 12:00 AM ADDED : நவ 09, 2023 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்:
அறிவியலை புரிந்து படித்தால் அறிவாளி ஆகலாம் என, பல்லடம் அரசு பெண்கள் பள்ளியில் அளித்த செயல்முறை விளக்கம், மாணவியரை குஷிப்படுத்தியது.பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் குறித்த அச்சத்தை மாணவர்கள் மத்தியில் போக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஆறுமுகம், துணை கவர்னர் கவிதா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார்.பயிற்சியாளர் நவீன்குமார் பேசியதாவது: 
அறிவியலை மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும். சில மாணவர்கள் அறிவியல் என்றாலே அச்சப்படுகின்றனர். இதற்கு காரணம், சரியான புரிதல் இல்லை. மாணவர்கள் மத்தியில் உள்ள இந்த அச்சத்தை போக்கவே இது போன்ற நிகழ்ச்சியை நடத்துகிறோம்.அமிலம், உலோகம், திடம், திரவம் என, அறிவியல் சார்ந்த பொருட்களை பயன்படுத்தும் போது ஏற்படும் விளைவுகளை, செயல்முறை விளக்கம் மூலம் மாணவர்களே செய்யும்போது, எளிதில் அவர்களின் கேள்விகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலும், அறிவியல் மீதான ஆர்வம் மாணவர்களுக்கு அதிகரிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, பல்வேறு ரசாயனங்கள், அமிலங்கள், உலோகங்கள், திரவங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, பயிற்சியாளர் நவீன்குமார் நகைச்சுவையுடன் செயல்முறை விளக்கம் அளித்தார். இது, மாணவியரை மிகவும் குஷிப்படுத்தியதுடன், சிந்திக்கவும் செய்தது. உதவி தலைமை ஆசிரியை புஷ்பலதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us