UPDATED : நவ 09, 2023 12:00 AM
ADDED : நவ 09, 2023 10:51 AM
கோவை:
தொடக்க கல்வித்துறையின் கீழ் சிறப்பாக செயல்படும் மூன்று பள்ளிகளுக்கு சுழற்கேடயம், சான்றிதழ் வழங்கப்படுவதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், பெற்றோர், பொதுமக்களுடன் இணைந்து பள்ளிக்கான வளர்ச்சி பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அங்கீகரிக்க, சிறந்த பள்ளி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.மாவட்டந்தோறும் மூன்று பள்ளிகள் வீதம், 114 பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள் தினமான நவ.,14ம் தேதி, சென்னையில் நடக்கும் விழாவில், கேடயம் வழங்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில், மசக்காளிபாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வீரியம்பாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி வடக்கு பகுதியை சேர்ந்த சந்தேகவுண்டம்பாளையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கடந்தாண்டு செயல்பாடுகள் அடிப்படையில், சிறந்த பள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.இப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர், விருது பெறும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
