UPDATED : நவ 09, 2023 12:00 AM
ADDED : நவ 09, 2023 10:58 AM
அ நிறம் | அளவு
இந்நிலையில், 11 சட்டக் கல்லுாரிகள் துவங்க, அரசுக்கு தனியார் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். சட்டக் கல்லுாரிகள் இல்லாத மாவட்டங்களில், அரசு சட்டக் கல்லுாரிகள் துவங்க, உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. கல்வி பெறுவது அடிப்படை உரிமை என தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், அவகாசம் வழங்கும்படி கோரினார். இதையடுத்து, தொடக்கக் கல்வி பெறுவது மட்டுமே அடிப்படை உரிமை; உயர் கல்வி அல்ல எனத் தெரிவித்த முதல் பெஞ்ச் விசாரணையை ஜனவரி 24க்கு தள்ளி வைத்தது.
