UPDATED : நவ 09, 2023 12:00 AM
ADDED : நவ 09, 2023 11:06 AM
அ நிறம் | அளவு
2024 - 25ம் கல்வி ஆண்டில் இருந்து, கல்வியின் தரத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மதிப்பிடப்பட உள்ளன. இதற்காக, என்.எம்.சி., எனும் தேசிய மருத்துவ ஆணையம், இந்திய தர கவுன்சிலுடன் கடந்த ஜூலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தற்போது, அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே என்.ஐ.ஆர்.எப்., எனும் தேசிய நிறுவன தரவரிசையில் பங்கேற்க வேண்டும் என்று என்.எம்.சி.,யின் நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரிய உறுப்பினர் டாக்டர் யோகேந்திர மாலிக் குறிப்பிட்டுள்ளார்.
