தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சேதமடைந்த 220 பள்ளிகள்!: ரூ.6.72 கோடியில் சீரமைக்க நடவடிக்கை

சேதமடைந்த 220 பள்ளிகள்!: ரூ.6.72 கோடியில் சீரமைக்க நடவடிக்கை

சேதமடைந்த 220 பள்ளிகள்!: ரூ.6.72 கோடியில் சீரமைக்க நடவடிக்கை


UPDATED : நவ 11, 2023 12:00 AM

ADDED : நவ 11, 2023 06:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2023 12:00 AM ADDED : நவ 11, 2023 06:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் பழுதடைந்த 220 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டடங்களை சீரமைக்க, 6.72 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான, டெண்டர் விடப்பட்டு, ஊரக வளர்ச்சி துறையினர் இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.திருநெல்வேலி மாவட்டத்தில், 2021ல், அரசு உதவி பெறும் பள்ளி கட்டடம் இடிந்து, மூன்று மாணவர்கள் இறந்தனர். இதை தொடர்ந்து, தமிழகம் முழுதும் பள்ளி கட்டடங்களை, மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, பழுதடைந்த கட்டடங்கள் குறித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, அரசு பள்ளிகளில் கட்டடங்களை பராமரிக்கவும், பழுதடைந்த கட்டடங்களை இடிக்கவும், அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் 481, நடுநிலைப் பள்ளிகள் 188 என, 669 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், பராமரிப்பு மற்றும் பழுதடைந்த கட்டடங்களை, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் ஆய்வு செய்தனர்.அதன்பின், 2022 - 23ம் ஆண்டில், 298 பள்ளி கட்டடங்கள், சமையல் கூடம், கழிப்பறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, 8.80 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்து, ஊரக வளர்ச்சி துறைக்கு வழங்கியது.மேலும், 2023 - 24ம் ஆண்டுக்கான டெண்டர் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், 217 பள்ளி கட்டடங்களில் முழுமையாக பணிகள் முடிந்துள்ளன. 81 பள்ளி கட்டடங்களில், பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு வட்டாரங்களில் உள்ள 220 பள்ளி கட்டடம், சமையல் கூடம், கழிப்பறை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, 6.72 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பணிகளுக்கு, டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவக்கப்பட உள்ளன.செங்கல்பட்டு மாவட்டத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டடங்கள் உள்ளிட்ட 220 பணிகள் மேற்கொள்ள, டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, 298 பணிகளில், 217 பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 81 பணிகளை முழுமையாக முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம் என செங்கல்பட்டு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us