பிட் இந்தியா விழிப்புணர்வு வாரம் கல்லுாரிகளுக்கு சிறப்பு அறிவுறுத்தல்
பிட் இந்தியா விழிப்புணர்வு வாரம் கல்லுாரிகளுக்கு சிறப்பு அறிவுறுத்தல்
UPDATED : நவ 14, 2023 12:00 AM
ADDED : நவ 14, 2023 10:27 AM
கோவை:
பிட் இந்தியா மிஷன் கடந்த, 2019ம் ஆண்டு ஆக., மாதம் பிரதமரால் துவக்கப்பட்டது.தினசரி வாழ்கையில் உடற்பிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதில் மக்களை ஈடுபடுத்துவதே நோக்கம்.இதன் வாயிலாக, ஆரோக்கியமான இந்தியா பல்வேறு வளர்ச்சிகளை எட்ட இயலும். அதன்படி, வரும், நவ., 15 முதல் டிச., 15ம் தேதிக்குள் பிட் இந்தியா விழிப்புணர்வு நிகழ்வுகளை, கல்லுாரிகளில் நடத்த, பல்கலை மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.இந்த ஒரு வார காலத்தில், ஆரோக்கியத்தின் அவசியம், உடற்பயிற்சியின் அவசியம் குறித்த கருத்தரங்குகள், வினாடி வினா, விளையாட்டு போட்டிகள், யோகா, போஸ்டர் மேக்கிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி, அதில் மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரின் பங்கேற்பையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
