தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாடல் வடிவமைப்பு போட்டி சிதம்பரம் மாணவர் தேர்வு

மாடல் வடிவமைப்பு போட்டி சிதம்பரம் மாணவர் தேர்வு

மாடல் வடிவமைப்பு போட்டி சிதம்பரம் மாணவர் தேர்வு


UPDATED : நவ 14, 2023 12:00 AM

ADDED : நவ 14, 2023 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2023 12:00 AM ADDED : நவ 14, 2023 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:
தமிழக பள்ளி அளவில் நடத்தப்பட்ட லூனார் மாடல் வடிவமைப்பு போட்டியில், சிதம்பரம் ஆறுமுகநாவலர் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒப்பன் ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்ற லூனார் கேம்ப் 2023 க்கான போட்டி நடத்தப்பட்டது. 29 மாவட்டங்களில் இருந்து, 108 பள்ளிகளை சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளி மாணவர்கள் சக்திவேல், தமிழ்அமுதன் இருவரும், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டனர். அதில், சக்திவேலின் லூனார் ரோவர் லான்ச் என்ற படைப்பு மாநில அளவிலான போட்டியில் தேர்வாகியுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து 36 பள்ளிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதிலும் கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவர் சக்திவேலை பள்ளிக்குழு செயலாளர் அருள்மொழிச்செல்வன், ஆசிரியர்கள் வேல்பிரகாஷ், சுமதி ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us