UPDATED : நவ 14, 2023 12:00 AM
ADDED : நவ 14, 2023 05:26 PM
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினரில் 18 முதல் 45 வயதுள்ள எழுத, படிக்க தெரிந்தவர்கள் தாட்கோ மூலம் இலவசபயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்.தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களில் அடிப்படை எழுத்தறிவு தெரிந்தவர்களுக்கு வீட்டு வேலை செய்பவர், எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு இலகு ரக மோட்டார் வாகன ஓட்டுநராகவும் மற்றும் உதவி குழாய் பழுது பார்ப்பவர், நான்கு சக்கர வாகன சேவை உதவியாளராகவும், பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டு பாய் ஆண் மற்றும் பெண் உதவியாளராகவும், பிளஸ் 2 படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் வழங்க உள்ளது.இதற்கு 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலம் 14 நாட்கள். சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படும். அங்கு தங்கி படிக்கும் வசதியும் செய்து தரப்படும். www.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
