மின்ட் பிரமாண்ட மேம்பால பூங்கா டிசம்பரில் திறக்க அதிகாரிகள் முடிவு
மின்ட் பிரமாண்ட மேம்பால பூங்கா டிசம்பரில் திறக்க அதிகாரிகள் முடிவு
UPDATED : நவ 15, 2023 12:00 AM
ADDED : நவ 15, 2023 10:01 AM
சென்னை:
மின்ட், சிங்கார சென்னை - 2.0 திட்டத்தின் கீழ், ராயபுரம், பேசின் பாலம் சாலை, மின்ட் மேம்பாலம் அருகில் 5 கோடி ரூபாய் செலவில் 13,708 சதுர பரப்பளவில் மாநகராட்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.மியோவாக்கி காடுகள், பல வகையான மரங்கள், மூலிகை செடிகள் நடப்பட்டுள்ளன. மேலும் நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், யோகா கூடம், சிறுவர்களுக்கான திடல் உள்ளிட்டவையும் அமைக்கப்படுகின்றன. பூங்கா முழுதும் எல்.இ.டி., விளக்குகள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. வித்தியாசமான சிற்பங்களும், வாகன நிறுத்துமிடங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.பூங்கா பணி குறித்து, ராயபுரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மின்ட் பூங்காவில், 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. வாகன நிறுத்தம், உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் அமைப்பு, பூங்காவின் முன்பக்க எலிவேஷன் பணி மட்டும், தற்போது நடந்து வருகிறது. அப்பணிகளும் ஒரு மாதத்தில் முடிவடையும். டிசம்பரில், பூங்கா திறக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
