தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கூட்டுறவு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

கூட்டுறவு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

கூட்டுறவு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : நவ 15, 2023 12:00 AM

ADDED : நவ 15, 2023 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2023 12:00 AM ADDED : நவ 15, 2023 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையத்தில், அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து, காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் ஜெயாஸ்ரீ அறிக்கை:
காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நடப்பாண்டிற்கான அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பெற, நவ.,30ம் தேதி, மாலை 5:00 மணி வரையில் விண்ணப்பிக்கலாம்.குறிப்பாக, www.tncuicm.com என்னும் இணையத்தில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்ப கட்டணத்தை இணைய வழியாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு இணைய தளத்தில் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.மேலும், விபரங்களுக்கு காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.6, வந்தவாசி சாலை, கலெக்டர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் என்கிற முகவரி மற்றும் 044 -27237699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us