தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்டாக் மருத்துவ கலந்தாய்வு முறைகேடு ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க வலியுறுத்தல்

சென்டாக் மருத்துவ கலந்தாய்வு முறைகேடு ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க வலியுறுத்தல்

சென்டாக் மருத்துவ கலந்தாய்வு முறைகேடு ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க வலியுறுத்தல்


UPDATED : நவ 23, 2023 12:00 AM

ADDED : நவ 23, 2023 10:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2023 12:00 AM ADDED : நவ 23, 2023 10:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
சென்டாக் மருத்துவ கலந்தாய்வு முறைகேடு குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் என, இண்டியா கூட்டணி வலியுறுத்தியுள்ளது.புதுச்சேரி மா.கம்யூ., அலுவலகத்தில் இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். சலீம், சேது செல்வம், தேவபொழிலன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பங்கேற்ற எதிர்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ., கூறுகையில், புதுச்சேரியில் சென்டாக் மருத்துவ கலந்தாய்வில், ஆண்டுதோறும் குளறுபடி நடந்து வருகிறது. மத்திய மருத்துவ ஆணையம் அறிவித்தும், குறிப்பிட்ட காலத்திற்குள் கலந்தாய்வை முடிக்காமல், விதிமீறல்கள் நடக்கிறது. ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கையிலும், குழப்பம் நீடிக்கிறது.மருத்துவ கலந்தாய்வில் சென்டாக் மூலம் அமைக்கப்பட்ட கல்வி கட்டணத்தை தாண்டி, இரு மடங்காக வசூலிக்கின்றனர். மாப் அப் கவுன்சிலில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இவை அனைத்தையும், ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை செய்ய, கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளோம். கல்வித்துறை மூலம், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். பாசிக் நிறுவனத்தை புதுச்சேரி அரசு மூடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.முதல்வர் ரங்கசாமி, இதுவரை எத்தனை அரசு சார்பு நிறுவனங்களை திறந்து வைத்திருக்கிறார். புதுச்சேரி அரசு, எல்லா துறைகளிலும், தோல்வியை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது தான். இதுவரை, என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றினர் என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us