UPDATED : நவ 27, 2023 12:00 AM
ADDED : நவ 27, 2023 09:56 AM
அ நிறம் | அளவு
சென்னை:
புதிய கல்வி கொள்கைப்படி, நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் இளநிலை, முதுநிலை படிப்பு மாணவர்கள், ஆன்லைன் வழியில் விருப்ப பாடங்களில் சேர்ந்து படிப்பது கட்டாயம்.இந்த படிப்புகளுக்கு, கிரெடிட் என்ற வகையில், கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். இதன்படி, எம்.எட்., என்ற முதுநிலை கல்வி படிக்கும் மாணவர்கள், இரண்டு ஆன்லைன் படிப்புகளை படிக்க வேண்டியது கட்டாயம் என, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.இதற்காக தொழில்முனைவோர் மேம்பாடு, பெண் தொழில் முனைவோர் ஆகிய, இரண்டு படிப்புகள் ஆன்லைன் வாயிலாக இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
