UPDATED : நவ 28, 2023 12:00 AM
ADDED : நவ 28, 2023 09:51 AM
விருதுநகர்:
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் சங்கம் மாநில தலைவர் நவநீதக்கிருஷ்ணன், பொதுச்செயலாளர் பாண்டியராஜா கூறியதாவது:
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளி விடுதிகளில் 2011 முதல் ரூ.3000 அடிப்படை ஊதியத்தில் 239, தொகுப்பூதியத்தில் 1304 துப்புரவு ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கி, ஓய்வு பெறும் போது ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும்அனைத்து விடுதிகளிலும் துாய்மை பணியாளர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும்.2006 முதல் மரணம் அடைந்த அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அவற்றையும் உடனடியாக வழங்க வேண்டும்.அலுவலக உதவியாளர், விடுதி காவலர் போன்ற பணியிடங்கள் சமையலர் பணிமூப்பு பட்டியலின் படி பதவி உயர்வு வழங்க வேண்டும். நேரடி அலுவலக உதவியாளர், காவலர் பணிநியமனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.மாநிலம் முழுவதும் சமையலர் காலிப்பணியிடம் நிரப்பப்பட வேண்டும். 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் சில மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதற்கு பின் காலிப்பணியிடம் நிரப்பபடவில்லை என்றனர்.
