தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எப்.எம்.ஜி.இ., தேர்வு

எப்.எம்.ஜி.இ., தேர்வு

எப்.எம்.ஜி.இ., தேர்வு


UPDATED : டிச 02, 2023 12:00 AM

ADDED : டிச 02, 2023 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2023 12:00 AM ADDED : டிச 02, 2023 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாரின் மெடிக்கல் கிராஜுவேட் எக்‌ஷாமின் - எப்.எம்.ஜி.இ., எனும் இத்தேர்வை மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. பிரதான தகுதிகள்:
இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.இந்திய தூதரகத்தால் உறுதிசெய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட முதன்மை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., அல்லது அதற்கு நிகரான படிப்பை  நிறைவு செய்திருக்க வேண்டும்.2023 அக்டோபர் 31ம் தேதிக்குள் மருத்துவ படிப்பின் இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையத்திடம், தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.தேர்வு விபரங்கள்:
மொத்தம் 300 மல்டிபில் சாய்ஸ் கேள்விகள் இடம்பெறும். ஆங்கில மொழியில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். பகுதிக்கு 150 கேள்விகள் வீதம் மொத்தம் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு தலா 150 நிமிடங்களில் பதில் அளிக்கப்பட வேண்டும். முதல் பகுதிக்கான தேர்வு காலையிலும், இரண்டாம் பகுதிக்கான தேர்வு பிற்பகலிலும் நடைபெறும். தவறான பதிலுக்கு நெகட்டிவ் மதிப்பெண் இல்லை. தேர்ச்சி பெற குறைந்தது 150 மதிப்பெண் பெற வேண்டும். பாடங்கள்:
அனாடமி, பிசியாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பேதாலஜி, மைக்ரோபயாலஜி, பார்மகாலஜி, பாரின்சிக் மெடிஷின், சைக்யாட்ரி, டெர்மடாலஜி, ரேடியோதெரபி, ஜெனரல் சர்ஜரி, அனெஸ்தீசியா, ஆர்தோபீடிக்ஸ் உட்பட பல்வேறு பாடங்களில் இருந்து கேளிவிகள் இடம்பெறும்.தேர்வு மையங்கள்:
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, திருப்பதி, விசாகப்பட்டினம், கோழிக்கோடு, மங்களூரு, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா உட்பட 45 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது.தேர்வு கட்டணம்:
ஜி.எஸ்.டி., உட்பட ரூ.7,080.விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 13தேர்வு நடைபெறும் நாள்:
ஜனவரி 20விபரங்களுக்கு:
https://natboard.edu.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us