தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணி துவக்கம்: இஸ்ரோ புதிய அப்டேட்

ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணி துவக்கம்: இஸ்ரோ புதிய அப்டேட்

ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணி துவக்கம்: இஸ்ரோ புதிய அப்டேட்


UPDATED : டிச 02, 2023 12:00 AM

ADDED : டிச 02, 2023 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2023 12:00 AM ADDED : டிச 02, 2023 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்துள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருக்கும் இரு முக்கிய ஆய்வுக் கருவிகள், செயல்பாட்டை துவங்கி உள்ளன என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.சூரியனை ஆய்வு செய்வதற்காக, கடந்த செப்., 2ல், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. இது, பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம் பயணம், சூரியனுக்கு மிக அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.புதிய அப்டேட்இது குறித்து குறித்து இஸ்ரோ எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 
ஆதித்யா எல்-1 விண்லத்தில் சோலார் ஸ்பெக்ட்ரோ மீட்டர் (swis) என்ற கருவி செயல்பட துவங்கியது. சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்துள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருக்கும் இரு முக்கிய ஆய்வுக் கருவிகள், செயல்பாட்டை துவங்கி உள்ளன. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் லெக்ராஞ்சியன் புள்ளி 1ல் ஆதித்யா எல்-1 விண்கலம் நிலநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us