தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவக்கல்லுாரி சுற்றுச்சுவர் சேதம் தேங்கும் மழைநீரால் பாதிப்பு

மருத்துவக்கல்லுாரி சுற்றுச்சுவர் சேதம் தேங்கும் மழைநீரால் பாதிப்பு

மருத்துவக்கல்லுாரி சுற்றுச்சுவர் சேதம் தேங்கும் மழைநீரால் பாதிப்பு


UPDATED : டிச 03, 2023 12:00 AM

ADDED : டிச 03, 2023 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2023 12:00 AM ADDED : டிச 03, 2023 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியின் சுற்றுச்சுவர் சூழ்ந்து தேங்கியுள்ள மழைநீரால் பாதித்து சேதம் அடைய துவங்கி உள்ளது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியின் 2021ல் செயல்பாட்டுக்கு வந்தது. வரப்பிரசாதமாக அமைந்த இக்கல்லுாரியில் சுற்றுச்சுவரை சூழ்ந்து துவக்கம் முதலே மழைநீர் தேங்கி வந்தது. முற்றிலும் பள்ளமாக இருப்பதால் சுற்றுச்சுவரை பலவீனப்படுத்தி வந்தது. 2 ஆண்டுகளில் சுற்றுச்சுவரின் அதிகம் நீர் பிடித்து தற்போது அதன் மேற்பகுதி சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.கல்லுாரியின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்தால் அதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். விஷப்பூச்சிகள் நடமாட வாய்ப்புள்ளது. ஏற்கனவே மருத்துவக்கல்லுாரியை சுற்றிலும் புதர்மண்டிய, கைவிடப்பட்ட கட்டடங்கள் அதிகம் உள்ளன.இதனால் சுற்றுச்சுவர் தரமாக இருப்பது அவசியம். 2 ஆண்டுகளாக மழைநீர் தேங்கி தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதும் மழை பெய்வதால் தேங்கி அடர்ந்து வருகிறது. இது நாளடைவில் சுவரையே சாய்த்து விடும். இதே நிலை தான் மாவட்ட விளையாட்டு அரங்க சுற்றுச்சுவருக்கும் ஏற்பட்டது. ஆகவே சுற்றுச்சுவரை நெருக்கி மண்ணை மெத்தினால் சேதம் குறையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us