தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிச.,9ல் ஜாக்டோ ஜியோ மறியல்

டிச.,9ல் ஜாக்டோ ஜியோ மறியல்

டிச.,9ல் ஜாக்டோ ஜியோ மறியல்


UPDATED : டிச 03, 2023 12:00 AM

ADDED : டிச 03, 2023 10:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2023 12:00 AM ADDED : டிச 03, 2023 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக முதல்வரை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் டிச.,9ல் மறியல் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஆசிரியர்களில் சிறப்பு ஊதியம் பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் அளிக்க வேண்டும் என்பது உட்பட 11 அம்சங்களை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு போராடி வருகிறது.இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், முருகையன் கூறியதாவது: 
கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (டிச.,2) முதல் வேனில் பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது. நாங்கள் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் அரசு ஊழியர்களிடையே பிரசாரம் செய்வோம்.தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி நவ.,25ல் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தோம். தேர்தல் பணிகள் நடப்பதால் மறியல் போராட்டத்தை டிச.,9க்கு ஒத்தி வைத்துள்ளோம். அதன்பின்பும் தீர்வு இல்லையெனில் ஏற்கனவே அறிவித்தபடி டிச.,28 ல் சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடக்கும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us