UPDATED : டிச 03, 2023 12:00 AM
ADDED : டிச 03, 2023 05:06 PM
அ நிறம் | அளவு
சென்னை:
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(டிச.,04) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.புயல் மற்றும் அதிகனமழை எச்சரிக்கையை அடுத்து பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
