UPDATED : டிச 03, 2023 12:00 AM
ADDED : டிச 03, 2023 07:31 PM
சென்னை:
கால்நடை உதவி மருத்துவ பணிக்கான நேர்முகத்தேர்வு மிக்ஜம் புயல் காரணமாக டிச., 6 மற்றும் டிச., 7ம் தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு புயல் காரணமாக தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக கால்நடை உதவி மருத்துவ பணிக்கான நேர்முகத்தேர்வு நாளை (டிச.,4) நடைபெற இருந்த நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக புதன் கிழமை (டிச.,6) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே திங்கட்கிழமை (டிச.,4) நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த தேர்வுகள் புதன்கிழமையும் (டிச.,6), புதன்கிழமை அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் வியாழக்கிழமையும் (டிச., 7) கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
