தூய்மைக்கு முக்கியத்துவம்; பள்ளிகளுக்கு வலியுறுத்தல்
தூய்மைக்கு முக்கியத்துவம்; பள்ளிகளுக்கு வலியுறுத்தல்
UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 10:35 AM
உடுமலை:
பள்ளிக்குழந்தைகளுக்கு, மீண்டும் கைகழுவும் பழகத்தை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்வேறு நோய்த்தொற்று கிருமிகள், அசுத்தமான சூழலிருந்து கைகள் மூலமாகவே விரைவாக உடலை தாக்குகிறது. குழந்தைகள் பல இடங்களில் விளையாடுவதோடு, கைகளை முறையாக கழுவாமல் உணவு அருந்துவது, கைகளை வாயில் வைப்பது போன்ற பழக்கங்களால், எளிதில் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.குழந்தைகளுக்கு கை கழுவும் முறை மற்றும் முக்கியத்துவம் குறித்து கை கழுவும் தினமாகவே கொண்டாடப்படுகிறது. சில பள்ளிகளில், நாள்தோறும், மாணவர்கள் உணவு அருந்துவதற்கு முன்பும், விளையாட்டு மற்றும் கழிப்பறை சென்று வந்தவுடன் கைகளை கழுவுதல், பயிற்சியாக வழங்கப்பட்டு தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.ஆனால் சில பள்ளிகளில், ஒருநாள் பயிற்சி அந்த நாளோடு அந்த பழக்கத்தையும் குழந்தைகள் விட்டு விடுகின்றனர். தற்போதைய சூழலில், பல்வேறு நோய்த்தொற்றுகள் தொடர்ந்து பரவி வருவதால், குழந்தைகள் துாய்மை பழக்கத்தை பின்பற்ற, பள்ளி நிர்வாகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், கல்வித்துறையும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
