UPDATED : டிச 05, 2023 12:00 AM
ADDED : டிச 05, 2023 09:39 AM
மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு நவம்பர் மாத சம்பளம் வழங்காததை கண்டித்து பதிவாளர் அலுவலகம் முன் எம்.கே.யு., ஜாக் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒருங்கிணைப்பாளர்கள் வேளாங்கண்ணி ஜோசப், முத்தையா தலைமை வகித்தனர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார். மூட்டா மண்டல தலைவர் ரமேஷ்ராஜ், கூட்டுக் குழு நிர்வாகிகள் பேராசிரியர் சங்கர்நடேசன், முருகன், சுந்தரமூர்த்தி உட்பட 176 பேர் பங்கேற்றனர்.நிர்வாகிகள் பேசியதாவது:
பல்கலையில் நிலவும் நிதி நெருக்கடிக்கு துணைவேந்தர்தான் நிரந்தர தீர்வுகாண வேண்டும். நிதி ஆதாரம் பெற சென்னை சென்று உயர்கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.சம்பளமே வழங்கமுடியாத நிதிச் சூழலில் ரூ.50 லட்சத்தில் கம்யூனிட்டி ரேடியோ திட்டம் தற்போது தேவையா. அதற்கான முதற்கட்ட பணிக்காக ரூ.7 லட்சம் ஒதுக்கிய உத்தரவு வேதனையளிக்கிறது என்றனர்.
