UPDATED : டிச 05, 2023 12:00 AM
ADDED : டிச 05, 2023 09:40 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்:
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல்வர் ஊக்கத்தொகையை பெற அக். 7 ல் திறனாய்வுத் தேர்வு நடந்தது.இத்தேர்வில் 1,27,673 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 12 வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை ஆண்டுத்தோறும் ரூ. 10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கு தேர்வான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் 14 மாணவர்கள், 15 மாணவிகள் என மொத்தம் 29 பேர் ஊக்கத்தொகைக்கு தேர்வாகினர். விருதுநகர் ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அகஸ்டின் ஜெபக்குமார் ஊக்கத்தொகை பெற தேர்வாகி உள்ளார். மாணவனுக்கு பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் சுஜிதா தாமஸ், ஆசிரியர்கள் மாணவரை பாராட்டினர்.
