UPDATED : டிச 05, 2023 12:00 AM
ADDED : டிச 05, 2023 10:07 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
சுற்றுலாத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரி சுற்றுலாத்துறையில் 5 உதவியாளர் பணியிடங்களுக்கு 488 பேர் விண்ணப்பத்து இருந்தனர். இந்த பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தேர்வை 228 பேர் மட்டுமே எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.இந்த தேர்வில் சதிஷ்குமார் (பதிவுஎண்:10280), ரங்ககார்த்திகேயன் (10153), பரசுராமன் (10233), ஆஷா (10193), அமாஜி பல்லா (10294) ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தகவலை அரசு தேர்வு கட்டுப்பாட்டாளர் குமார் தெரிவித்துள்ளார்.
