4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
UPDATED : டிச 05, 2023 12:00 AM
ADDED : டிச 05, 2023 05:24 PM
அ நிறம் | அளவு
சென்னை:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை(டிச.,06) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலால் இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாத நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.போர்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
