தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரையில் இந்தியா சர்வதேச பயண கண்காட்சி நாளை நிறைவு

மதுரையில் இந்தியா சர்வதேச பயண கண்காட்சி நாளை நிறைவு

மதுரையில் இந்தியா சர்வதேச பயண கண்காட்சி நாளை நிறைவு


UPDATED : டிச 09, 2023 12:00 AM

ADDED : டிச 09, 2023 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2023 12:00 AM ADDED : டிச 09, 2023 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
பெங்களூரு குளோபல்டிரேட் பேர் அன்ட் கன்வென்ஷன் சார்பில் இந்தியா மற்றும் சர்வதேச பயண கண்காட்சி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில்நேற்று தொடங்கியது.சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், ஓய்வு விடுதிகள், தேசிய, சர்வதேச சுற்றுலா ஆப்பரேட்டர்கள் இங்கு ஸ்டால் அமைத்துள்ளனர். ராஜஸ்தான், இமாச்சல், உத்தரபிரதேச அரசுகளின் சுற்றுலா கண்காட்சி ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.கண்காட்சி குறித்து கன்வென்ஷன் இயக்குநர்கள் அனுராக் குப்தா, மீனாட்சி குப்தா கூறியதாவது:
சர்வதேச அளவில் ஸ்விட்சர்லாந்து, தாய்லாந்து, ஐரோப்பா, அஜர்பைஜான், பாலி, ஆஸ்திரேலியா, கென்யா நாடுகளின் நேரடி சுற்றுலா பேக்கேஜ்களை கண்காட்சியில் தேர்வு செய்யலாம். வழக்கமான திட்டமிட்ட சுற்றுலா மட்டுமின்றி, சுற்றுலா செல்வோரின் விருப்பத்திற்கேற்ற இடங்கள், நாட்கள் தேர்வு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவர்.இந்தியாவின் சிறப்புமிக்க அந்தமான் நிகோபார் தீவு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் எழில்மிகு இடங்களுக்கு செல்வதற்கான சிறப்பு மற்றும் ஹனிமூன் பேக்கேஜ்களும் உள்ளன. விழாக்கால விடுமுறை, வார விடுமுறை மற்றும் ஆண்டு விடுமுறை கொண்டாட்டங்களுக்கு ஏற்பவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்ற பேக்கேஜ்களும் தனித்தனியாக தரப்படும், என்றனர்.கண்காட்சி இன்றும், நாளையும் (டிச. 9,10) காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us