UPDATED : டிச 12, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 09:52 AM
விருதுநகர்:
கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள எஸ்.ஐ., தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஆக. 26ல் நடந்தது. உடற்தகுதித் தேர்வு நவ. 7, 8 ல் நடந்தன. இதற்கான முடிவுகள் டிச. 7 ல் வெளியானது. டிச. 19ல் நேர்முகத் தேர்வு நடக்கிறது.இத்தேர்வில் வெற்றிபெற்றோர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் நேர்காணல் குறித்த விழிப்புணர்வு, தேர்ச்சி பெறுவதற்கான நுணுக்கங்கள் குறித்த ஆலோசனைகள் துறை வல்லுனர்களை கொண்டு டிச. 14 காலை 10.30 மணிக்கு வழங்கப்பட உள்ளது.இதை பயன்படுத்தி போட்டித்தேர்வு தன்னார்வலர்கள் பணிவாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம். இதில் பங்கேற்க studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது9360171161என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வருகைபுரிந்து பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.
