UPDATED : டிச 12, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 10:09 AM
சாயல்குடி:
சாயல்குடியில் அரசு தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்களின் ஒருநாள் பள்ளி புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சரிகாபானு முன்னிலை வகித்தார். போதிய வகுப்பறைகள் இன்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக விளையாட்டு மைதானம் இல்லை.எனவே கூடுதல் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் கோஷமிட்டனர். பின் கடலாடி தாசில்தார் ரெங்கராஜ், தொடக்கக்கல்வி அலுவலர் ருக்மணிதேவி பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் மனு கொடுங்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஆவணம் செய்வோம் என்றனர். இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
