வினா வங்கி புத்தகம் எப்போது: மாணவர், பெற்றோர் கேள்வி
வினா வங்கி புத்தகம் எப்போது: மாணவர், பெற்றோர் கேள்வி
UPDATED : டிச 12, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 10:11 AM
திருப்பூர்:
பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவ, மாணவியருக்கு வினா வங்கி புத்தகம் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பொதுத்தேர்வு எழுதவுள்ள, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கான வினாவங்கி புத்தகம் தயாரிக்கப்படும். இதில், பாடவாரியாக பயிற்சி வினாக்கள், குறைந்த பட்ச கற்றல் கையேடு இணைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2, தொடர்ந்து, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்புக்கும் தேர்வுகள் துவங்குகிறது. திருப்புதல் தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் தயாராக ஏதுவாக விரைவாக வினா வங்கி புத்தகத்தை வழங்கிட வேண்டும் என்பது மாணவ, மாணவியர், பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு ஜன., முதல் வாரத்தில், வினா வங்கி புத்தகம் வழங்கப்பட உள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது என்றனர்.
