நெட் தேர்வு மையத்தில் விதிமுறைகளை தாண்டி கட்டுப்பாடு விதிப்பதாக புகார்
நெட் தேர்வு மையத்தில் விதிமுறைகளை தாண்டி கட்டுப்பாடு விதிப்பதாக புகார்
UPDATED : டிச 12, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 10:20 AM
தொண்டாமுத்தூர்:
விராலியூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நெட் தேர்வின்போது, அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதாக புகார் எழுந்துள்ளது.நாடு முழுவதும், தேசிய தேர்வுகள் முகமை சார்பில், பல்கலைக்கழக மானிய குழு நெட் தேர்வு, ஆண்டிற்கு இரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, 83 பாடப்பிரிவுகளுக்கான நெ&' இரண்டம் கட்ட தேர்வு, கடந்த 6ம் தேதி துவங்கியது; வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.கோவை மாவட்டத்தில், இரு தனியார் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், விராலியூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த, 7ம் தேதி நடந்த, நெட் தேர்வின்போது, தேர்வு எழுத வந்த ஆசிரியர்களிடம், பல்கலைக்கழக மானிய குழு விதித்திருந்த விதிமுறைகளை தாண்டி, கூடுதல் கட்டுப்பாடு விதித்ததாக புகார் எழுந்துள்ளது.தேர்வு எழுதியவர்கள் கூறுகையில், நெட் தேர்வில், மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள், மெட்டல் போன்றவை எடுத்து செல்ல அனுமதியில்லை. ஆனால், இந்த தேர்வு மையத்தில், கம்மல், செயின், மோதிரம், கொலுசு, மெட்டி, வெள்ளி அரைஞாண் போன்றவை அணிந்து செல்லக்கூடாது என, யு.ஜி.சி., விதிமுறைகளில் குறிப்பிடாத கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.தேர்வு எழுத வந்த ஒரு ஆசிரியர் அணிந்திருந்த, வெள்ளி அரைஞாணை அகற்ற கூறியுள்ளனர். அவர் மறுத்ததால், அரைஞாண் முழுவதும் டேப் சுற்றி அனுப்பியுள்ளனர். உரிய பஸ் வசதி இல்லாததால், 2 நிமிடங்கள் தாமதமாக வந்த தேர்வர்களை, தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் என்றனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்ட போது, முறையாக பதிலளிக்கவில்லை.
