தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் ஆக்குவதாக கூறி மோசடி: பேராசிரியர் வீடு முன் பெண் தர்ணா

ஆசிரியர் ஆக்குவதாக கூறி மோசடி: பேராசிரியர் வீடு முன் பெண் தர்ணா

ஆசிரியர் ஆக்குவதாக கூறி மோசடி: பேராசிரியர் வீடு முன் பெண் தர்ணா


UPDATED : டிச 12, 2023 12:00 AM

ADDED : டிச 12, 2023 11:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2023 12:00 AM ADDED : டிச 12, 2023 11:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலுார்:
பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் செல்வா நகர் பகுதியை சேர்ந்த மகாராஜன் மனைவி மலர்விழி, 47. 2017ல், துறைமங்கலத்தை சேர்ந்த பேராசிரியர் குமரவேல், 43, என்பவர் நடத்திய டி.ஆர்.பி., தேர்வு பயிற்சி மையத்தில் பயின்றார். அப்போது, அரசு ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தை கூறி, 4.50 லட்சம் ரூபாயை அவர் வாங்கினார்.அதன் பின், அரசு ஆசிரியர் பணி தராமல் இருந்தார். இதனால், ஆத்திரமடைந்த மலர்விழி, நேற்று காலை 9:00 மணிக்கு குமரவேல் வீட்டை வெளிப்புறமாக பூட்டி, வாசலில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் சமரசம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us