UPDATED : டிச 12, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 11:51 AM
பெங்களூரு:
தமிழக அரசு வழங்கிய 25 லட்சம் ரூபாயை, தான் படித்த நான்கு கல்லுாரிகளுக்கு, சந்திரயான் - 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் நன்கொடையாக வழங்கினார்.இஸ்ரோவில் சிறப்பாக பணிபுரிந்த ஒன்பது தமிழக விஞ்ஞானிகளுக்கு, தமிழக அரசு சார்பில், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். அனைவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.இந்த பணத்தை, சந்திரயான் - 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், தான் படித்த கல்லுாரிகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருந்தார். இதன்படி, விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி; சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி; திருச்சி தேசிய தொழில்நுட்ப மையம்; மெட்ராஸ் ஐ.ஐ.டி., ஆகிய நான்கு கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளை, பெங்களூருக்கு வரவழைத்தார்.நகரின் பழைய விமான நிலைய சாலையில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக் கோள் மையத்துக்கு வரவழைத்து, நான்கு கல்லுாரிகளுக்கும் தலா 6.25 லட்சம் ரூபாய் கொண்ட காசோலைகளை வழங்கினார்.
