தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய மருத்துவ கமிஷனின் லோகோ மாற்றம் ஏன்?

தேசிய மருத்துவ கமிஷனின் லோகோ மாற்றம் ஏன்?

தேசிய மருத்துவ கமிஷனின் லோகோ மாற்றம் ஏன்?


UPDATED : டிச 12, 2023 12:00 AM

ADDED : டிச 12, 2023 11:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2023 12:00 AM ADDED : டிச 12, 2023 11:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
தேசிய மருத்துவ கமிஷனின் லோகோ எனப்படும் குறியீட்டு சின்னம் சமீபத்தில் மாற்றப்பட்டது. இதுவரை, கிரேக்கர்களின் மருத்துவக் கடவுளான, அஸ்கிலிபியஸ் இடம்பெற்று வந்த நிலையில், நம் நாட்டில் மருத்துவ கடவுளாக கருதப்படும், தன்வந்திரியின் படம் அதில் மாற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால், தன்வந்திரியின் படத்துடன் கூடிய குறியீட்டு சின்னம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ராஜ்யசபாவில் இந்த விவகாரம் தொடர்பாக, திரிணமுல் காங்.,கின் சாந்தனு சென் நேற்று கேள்வி எழுப்பினார்.மருத்துவம் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது. ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிக்கும் வகையில் குறியீட்டு சின்னத்தை மாற்றக் கூடாது. மதச்சார்பற்றதாக அது இருக்க வேண்டும் என சாந்தனு சென் குறிப்பிட்டார்.இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது:
தன்வந்திரி, நம் நாட்டின் மருத்துவ அறிவியலின் சின்னமாக பார்க்கப்படுகிறார். அப்படியே, இந்த குறியீட்டு சின்னத்தையும் பார்க்க வேண்டும். இதில் மதச்சாயம் பூசக் கூடாது. தன்வந்திரி நம் நாட்டின் பாரம்பரியத்துடன் தொடர்புடையவர். நம் பாரம்பரியம் நிலைநாட்டப்பட்டுள்ளதற்கு, அனைவரும் பெருமைப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us