UPDATED : டிச 12, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 12:09 PM
அ நிறம் | அளவு
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, சென்னையில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளக்காடானது. முக்கிய சாலைகளில் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை பாதிப்பால் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து சேதமடைந்த பல்கலை சான்றிதழ்களுக்கு பதிலாக நகல்களை வாங்கிட இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளதாவது, சேதமடைந்த கல்வி சான்றிதழ்களை www.mycertificates.in என்ற இணையதளத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழ் விவரங்களை பதிவேற்றிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
