UPDATED : டிச 13, 2023 12:00 AM
ADDED : டிச 13, 2023 09:36 AM
அ நிறம் | அளவு
முதல்வர் உத்தரவின்படி, மழை, வெள்ள பாதிப்பால், கல்லுாரி மற்றும் பல்கலை சான்றிதழ்களை இழந்த, மாணவ, மாணவியர், தங்கள் சான்றிதழ்களின் நகல்களை, கட்டணமின்றி பெறுவதற்காக, www.mycertificates.in இணையதளம் உயர்கல்வித்துறையால் உருவாக்கப்பட்டு உள்ளது.மாணவ, மாணவியர் தாங்கள் இழந்த சான்றிதழ் குறித்த விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யலாம். பதிவு செய்த பின், அவர்களின் இ - மெயில் முகவரிக்கு, ஒப்புகை சீட்டு அனுப்பப்படும்.பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லுாரி மற்றும் பல்கலைகளில் இருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும். சந்தேகங்களுக்கு 1800 425 0110 என்ற, கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளவும்.
