UPDATED : டிச 13, 2023 12:00 AM
ADDED : டிச 13, 2023 09:55 AM
திருப்பூர்:
கடந்த, 11ம் தேதி அரையாண்டு தேர்வுகள் துவங்க இருந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது.அதன்படி, ஆறு முதல் எட்டாம் வகுப்புக்கு இன்று காலை, 10:00 முதல், 12:30 மணி வரை தமிழ் உட்பட மொழிப்பாடம் தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்புக்கு மதியம், 2:00 முதல் மாலை, 4:30 மணி வரை தேர்வு நடக்கிறது.பிளஸ் 1 வகுப்புக்கு, காலை, 9:30 முதல், மதியம், 12:45 மணி வரையும், பிளஸ் 2 வுக்கு மதியம், 1:15 முதல் மாலை, 4:30 மணி வரையும் தேர்வு நடக்கிறது. மேல்நிலைப்பள்ளிக்கு டிச., 15ம் தேதி முதல் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. டிச., 22 ம் தேதி ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவருக்கு தேர்வுகள் முடிவடைகிறது. 23 முதல், 31 ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டு, 2024, ஜன., 2ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.சி.இ.ஓ., கீதா கூறுகையில், அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுகளை எவ்வித பதட்டமின்றி மாணவ, மாணவியர் எதிர்கொள்ள தேவையான அறிவுரை வழங்க வகுப்பாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.
