UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:03 AM
சென்னை:
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசுவின் பிறந்த நாளாக கருதப்படும் டிசம்பர் 25 உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களால் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகத்தில் வேளாங்கண்ணி, தூத்துக்குடி, சென்னை சாந்தோம், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, கொடைக்கானல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. தேவாலயங்களில் அமைக்கப்பட்ட குடில்களில் இயேசுவின் குழந்தை சொரூபம் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடந்தது. இந்தியாவில் டில்லி, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கேரளா,, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ்
உலகில் இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிகன் நகரம், சிங்கப்பூர், அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், தெர்லேண்ட், போலந்து, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் தங்களுடைய பாரம்பரிய உணவு வகைகளான டர்கி உள்ளிட்டவற்றை தயாரித்து கொண்டாடினர். கிறிஸ்துமஸ் மரங்களை விளக்குகளால் அலங்கரித்து உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
