தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாட்டுப்புற கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாட்டுப்புற கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாட்டுப்புற கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : டிச 25, 2023 12:00 AM

ADDED : டிச 25, 2023 10:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 25, 2023 12:00 AM ADDED : டிச 25, 2023 10:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
மாமல்லபுரம் அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலை கல்லுாரியில், நாட்டுப்புறக் கலைப்பயிற்சி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலை கல்லுாரியில், பகுதி நேர நாட்டுப்புறக்கலை பயிற்சி மையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், தப்பாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, சிலம்பாட்டம் ஆகிய நான்கு வகையான பயிற்சிகள், ஓராண்டு வழங்கி, தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தால் சான்றிதழ் வழங்கப்படும்.இந்த பயிற்சி, வாரந்தோறும் வெள்ளி, சனிக்கிழமைகளில், மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, நடத்தப்பட உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை, கடந்த 1ம் தேதி துவங்கியது. வரும் ஜன., 5ம் பயிற்சிகள் துவங்கப்பட உள்ளன. இதில், 17 வயதுக்கு மேற்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவர். இதற்கான விண்ணப்பங்கள், மேற்கண்ட கல்லுாரியில் வழங்கப்படுகிறது.பயிற்சிக்கான ஆண்டு கட்டணம் 500 ரூபாய். மேலும் விபரங்களுக்கு, தொலைபேசி எண்கள்: 044-2744 2261-, 73586 28242 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us