UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:10 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 81 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்காக, 1,297 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், தகுதியான 1,094 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.திருப்பூர் - மங்கலம் ரோட்டிலுள்ள குமரன் மகளிர் கல்லுாரியில் நேற்று, கூட்டுறவு உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது; 1,094 பேர் தேர்வு எழுதினர். கலெக்டர் கிறிஸ்துராஜ், தேர்வு மையத்தை ஆய்வு செய்தார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
