sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சாதி கக்கூஸ் கோயில் புத்தகம் வெளியிட பா.ஜ., கடும் எதிர்ப்பு

/

சாதி கக்கூஸ் கோயில் புத்தகம் வெளியிட பா.ஜ., கடும் எதிர்ப்பு

சாதி கக்கூஸ் கோயில் புத்தகம் வெளியிட பா.ஜ., கடும் எதிர்ப்பு

சாதி கக்கூஸ் கோயில் புத்தகம் வெளியிட பா.ஜ., கடும் எதிர்ப்பு


UPDATED : டிச 26, 2023 12:00 AM

ADDED : டிச 26, 2023 05:20 PM

Google News

UPDATED : டிச 26, 2023 12:00 AM ADDED : டிச 26, 2023 05:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:
அம்பேத்கர், ஈ.வெ.ரா., கார்ல் மார்க்ஸ் ஆகியோரை போற்றும் விதமாக அபெகா பண்பாட்டு இயக்கம் நடத்தி வரும் ஜெயராமன், சாதி கக்கூஸ் கோயில் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி, அதை புதுக்கோட்டையில் வரும் 30ல் வெளியிட உள்ளார்.புதுக்கோட்டையில் அபெகா பண்பாட்டு இயக்க தலைமையகம் கீழ ராஜ வீதியில் உள்ளது. அங்கு புத்தக வெளியிட்டு விழா நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இடதுசாரி சிந்தனை கொண்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.இது குறித்து, புதுக்கோட்டையைச் சேர்ந்த பா.ஜ., மகளிர் அணி மாநில பொதுச் செயலர் கவிதா ஸ்ரீகாந்த் கூறியதாவது: 
இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள், வம்படியாக வலதுசாரிகளையும், காலம் காலமாக இந்தியா முழுதும் பின்பற்றப்பட்டு வரும் கலாசார, பண்பாடுகளை கேலியும், கிண்டலும் செய்வதோடு, கொச்சையாக விமர்சிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.சாதி கக்கூஸ் கோயில் புத்தகத்தில், ஹிந்து கோவிலும் இந்தியாவின் கக்கூசும் ஒன்றே, சிவபெருமானுக்கு ஜாதிச் சான்றிதழ், கொலைகள் செய்யும் ஹிந்து மதம் ஆகிய தலைப்புகளில் முரண்பட்ட கருத்துக்களை பதிவிட்டிருப்பதாக தகவல். புத்தகம் வெளியிடப்பட்டால், ஹிந்துக்கள் மனம் புண்படுவதோடு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும்.அதனால், புத்தகத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுக்க உள்ளோம். போலீசிடமும் புகார் கொடுக்கப்படும். மீறி புத்தகம் வெளியிடப்பட்டால், கட்சியின் மாநில தலைமையின் அனுமதியோடு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us