தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போச்சம்பள்ளி மகளிர் பள்ளியில் குடிநீர் வினியோகம் ரத்தால் அவதி

போச்சம்பள்ளி மகளிர் பள்ளியில் குடிநீர் வினியோகம் ரத்தால் அவதி

போச்சம்பள்ளி மகளிர் பள்ளியில் குடிநீர் வினியோகம் ரத்தால் அவதி


UPDATED : டிச 26, 2023 12:00 AM

ADDED : டிச 26, 2023 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2023 12:00 AM ADDED : டிச 26, 2023 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பனங்காட்டூர், புளியம்பட்டி திருவயலுார் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 750 மாணவியர் படிக்கின்றனர்.இங்கு துவக்கதில் தென்பெண்ணை ஆற்று நீர் மற்றும் போர்வெல் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் பைப் லைன் அமைத்து, பள்ளிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.ஆறு மாதங்களுக்கு முன் அப்பள்ளிக்கு செல்லும் ஒகேனக்கல் குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டதால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் வரை, அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் பயனில்லை.மேலும், போச்சம்பள்ளி அரசு பள்ளிக்கு மிக அருகிலுள்ள பெங்களூரான் கொட்டாய், எள்ளகவுண்டன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு, குடிநீர் தருவதற்காகவே, அரசு பள்ளிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பள்ளி மாணவியருக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us