ராகிங் புகார் வந்தால் கல்லுாரி முதல்வருக்கு சம்மன்
ராகிங் புகார் வந்தால் கல்லுாரி முதல்வருக்கு சம்மன்
UPDATED : ஜன 10, 2024 12:00 AM
ADDED : ஜன 10, 2024 10:24 AM
சென்னை:
கல்லுாரிகளில், ராகிங் பிரச்னைகள் எழுந்தால், முதல்வர் அல்லது பல்கலை பதிவாளர்களுக்கு, சம்மன் அனுப்பப்படும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.பல்கலை மானிய குழு - யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜெயின், கல்லுாரி, பல்கலைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
உயர் கல்வி நிறுவனங்கள் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாமல், ராகிங் பிரச்னைகள் மற்றும் மாணவர் தற்கொலை சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர் மற்றும் பல்கலை பதிவாளருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும்.இதில் விதிமீறல்கள் எழுந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, தேசிய ராகிங் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி வழியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் நடந்து, போலீஸ் விசாரணை மேற்கொண்டாலும், கல்லுாரி, பல்கலை அளவிலான ராகிங் ஒழிப்பு கமிட்டி, தேசிய கமிட்டி ஆகியவை விசாரணை நடத்தும்.எனவே, சம்பந்தப்பட்ட கல்லுாரிகள், பல்கலைகள் ராகிங் ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.