sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை மருத்துவ சேர்க்கை கல்லுாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

முதுநிலை மருத்துவ சேர்க்கை கல்லுாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

முதுநிலை மருத்துவ சேர்க்கை கல்லுாரிகளுக்கு கிடுக்கிப்பிடி


UPDATED : ஜன 10, 2024 12:00 AM

ADDED : ஜன 10, 2024 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2024 12:00 AM ADDED : ஜன 10, 2024 10:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மருத்துவ கல்லுாரிகள், முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர்களை நேரடியாக சேர்க்கக்கூடாது; தேசிய, மாநில அளவிலான ஆன்லைன் கவுன்சிலிங் வாயிலாக மட்டுமே சேர்க்க வேண்டும். அதேநேரத்தில், கட்டண விபரங்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது.முதுநிலை மருத்துவ படிப்பு தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் விபரம்:
*தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெறும், அனைத்து முதுநிலை, சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கையை, ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்த வேண்டும்.*கல்லுாரிகள் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது. சேர்க்கையில் வெளிப் படைத்தன்மை அவசியம்*நீட் தேர்வு தகுதி அடிப்படையிலும், அனுமதிக்கப்பட்ட இடங்கள் அடிப்படையிலும், மாணவர் சேர்க்கையை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்*கல்லுாரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களை அறிவிக்கும் போதே, ஒவ்வொரு கல்லுாரியும், கட்டண விபரங்களையும் வெளியிடலாம்*100 படுக்கைகள் உடைய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே, உள்ளுறை பயிற்சி பெற அனுமதி இருந்தது; இனி, 50 படுக்கைகள் உடைய மருத்துவமனைகளிலும் பயிற்சி பெறலாம்.இவ்வாறு வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டுதலின்படி, இந்தாண்டில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள், படிப்பின் விபரம், இடஒதுக்கீடு விபரம் உள்ளிட்ட வற்றை, ஆணையத்தின் மருத்துவ கல்லுாரிகளுக்கான தெரிவு பகுதியில் பதிவேற்றவும், தேசிய மருத்துவ ஆணையம், கல்லுாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us