பி.பி.ஏ., பி.சி.ஏ., படிப்புக்கும் ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறை அமல்
பி.பி.ஏ., பி.சி.ஏ., படிப்புக்கும் ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறை அமல்
UPDATED : ஜன 10, 2024 12:00 AM
ADDED : ஜன 10, 2024 10:33 AM
நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு, மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற வேண்டும்.அதன்படி, இன்ஜினியரிங், ஆர்க்கிடெக், நகர அமைப்பு, மேலாண்மை, மருந்து உற்பத்தி போன்ற தொழில்நுட்ப படிப்புகள், ஏ.ஐ.சி.டி.இ., விதிகளில் அடங்கும். கணினி அறிவியல் மற்றும் மேலாண்மை சார்ந்த, எம்.சி.ஏ., எம்.பி.ஏ., முதுநிலை படிப்புகளுக்கு மட்டும், தற்போது ஏ.ஐ.சி.டி.இ., வழியே ஒழுங்குமுறை விதிகள் அமைக்கப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், வரும் கல்வியாண்டில், பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எம்.எஸ்., ஆகிய இளநிலை படிப்புகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., ஒழுங்குமுறை விதிகள் அமலாக உள்ளன. எனவே, அனைத்து மாநில பல்கலைகளும், தங்கள் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், மேற்கண்ட இளநிலை படிப்புகளை நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., ஒழுங்குமுறை விதிகளை பின்பற்ற வேண்டியது கட்டாயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.