என்.எல்.சி.,க்கு ஸ்கோப் எமினென்ஸ் விருது துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் பாராட்டு
என்.எல்.சி.,க்கு ஸ்கோப் எமினென்ஸ் விருது துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் பாராட்டு
UPDATED : ஜன 19, 2024 12:00 AM
ADDED : ஜன 20, 2024 08:41 AM
நெய்வேலி:
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் டிஜிட்டல் மாற்றத்திற்கான பிரிவில் மிகவும் மதிப்புமிக்க விருதான ஸ்கோப் எமினென்ஸ் விருதை பெற்றுள்ளது.மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் உயரிய அமைப்பான ஸ்கோப் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான குழுவால் மதிப்பிடப்படுகிறது.இவ்விருது கடுமையானபோட்டி செயல்முறைகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டு பொதுத்துறை நிறுவனங்களின் சிறந்த சாதனைகள் நிறுவன வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தில் ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றிற்காக வழங்கி கவுரவித்து வருகிறது.இந்தஆண்டிற்கான விருது வழங்கும் விழா நேற்று புதுடில்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் தலைமை தாங்கினார். டிஜிட்டல்மாற்றத்திற்கான பிரிவில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சாதனை புரிந்தமைக்காக ஸ்கோப் எமினென்ஸ் விருது வழங்கப்பட்டது.விருதினை என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும்செயலாக்கத்துறை இயக்குநர் மோகன் ரெட்டி மற்றும் முதன்மை பொதுமேலாளர் சாலமன் லுாதர்கிங் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.விருதை வழங்கிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசுகையில். என்.எல்.சி. இந்தியா நிறுவனம் டிஜிட்டல் மாற்றத்திற்கான திட்டங்களை ஏற்று அதை செயல்படுத்துவதில் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது.என்.எல்.சி. பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும்அந்நிறுவனத்தின் சேர்மன் பிரசன்ன குமார் மோட்டு பள்ளியின் சீரிய தலைமையானது மாறும் தொழில்நுட்ப சூழலுடன் இணைந்த வளமான டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை வழிநடத்தி வருகிறது என்றார்.