sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமூக சீர்திருத்தவாதி கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

சமூக சீர்திருத்தவாதி கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

சமூக சீர்திருத்தவாதி கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு


UPDATED : ஜன 24, 2024 12:00 AM

ADDED : ஜன 24, 2024 10:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2024 12:00 AM ADDED : ஜன 24, 2024 10:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பீஹார்:
பீஹார் முன்னாள் முதல்வரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான கர்பூரி தாக்கூருக்கு, மறைவுக்கு பிறகான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.பீஹார் முன்னாள் முதல்வரும், பாரதிய கிராந்தி தள தலைவருமான கர்பூரி தாக்கூர், 1970 - 71 மற்றும் 1977 - 79ல் இருமுறை பீஹார் முதல்வராக பதவி வகித்துள்ளார். இவரது மகன் ராம்நாத் தாக்கூர், ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்.பி.,யாக தற்போது பதவி வகித்து வருகிறார்.மிகப் பெரும் சமூக சீர்திருத்தவாதியான கர்பூரி தாக்கூர் முதல்வராக பதவி வகித்தபோது, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அரசு வேலைகளில், 26 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இவர் 1978ல் அமல்படுத்திய இட ஒதுக்கீட்டு கொள்கை, பின்நாளில் மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு வித்திட்டது.இவர் பீஹார் கல்வி அமைச்சராக பதவி வகித்த போது, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வாழும் பகுதிகளில் பள்ளி, கல்லுாரிகளை திறந்தார். ஆங்கிலம் கட்டாய பாடமாக இருந்ததை ரத்து செய்தார்.நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலங்களை கைப்பற்றி, நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கினார். இதன் காரணமாக அவர், மக்களின் நாயகன் என போற்றப்பட்டார்.நேர்மையான அரசியல் தலைவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் வாழ்ந்து மறைந்த கர்பூரி தாக்கூருக்கு, மறைவுக்கு பிறகான பாரத் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இவரது நுாற்றாண்டு பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us