75வது குடியரசு தின விழா: நாடு முழுதும் கொண்டாட்டம்
75வது குடியரசு தின விழா: நாடு முழுதும் கொண்டாட்டம்
UPDATED : ஜன 26, 2024 12:00 AM
ADDED : ஜன 26, 2024 11:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று(ஜன.,26) நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டில்லி கடமை பாதையில் பல்வேறு மாநிலங்களின் பெருமையை விளக்கும் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.நேற்று ராஜஸ்தான் வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு, திறந்த ஜீப்பில் ஜெய்ப்பூர் நகரத்தை சுற்றிக்காட்டிய பிரதமர் மோடி, சாலையோர கடையில் அவருக்கு மசாலா டீ வாங்கிக் கொடுத்து மகிழ்வித்தார். குடியரசு தினத்தையொட்டி டில்லி முழுதும் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ளது.